Reliable Software
www.garudabazaar.com

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டோவுடன் சொன்ன ஹேப்பி நியூஸ்... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாக, கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, பல பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் கொடிய கொரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் என முடிவுகள் வெளியாகி , சிகிச்சை பெற்று ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

lokesh kanagaraj shares happy news to fans லோகேஷ் கனகராஜ் ஹேப்பி நியூஸ்

இந்த வார தொடக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் கூட கொரோனா வைரஸ் உறுதியானது. தற்போது மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை கெளரி ஜி. கிஷான்க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தனது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது கொரோனாவில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டேன். பரிசோதனையில் நெகட்டிவ் வந்துவிட்டது. உங்கள் அனைவருடைய வாழ்த்துகள் மற்றும் பிராத்தனைகளுக்காக நன்றி. தயவு செய்து அனைவரும் ஓட்டு போடுங்கள்" என்று கூறியுள்ளார். மேலும் தான்  ஓட்டு போட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த செய்தி லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

lokesh kanagaraj shares happy news to fans லோகேஷ் கனகராஜ் ஹேப்பி நியூஸ்

People looking for online information on Lokesh Kanagaraj will find this news story useful.