RRR Others USA
www.garudabazaar.com

KGF2: “குறுக்க மட்டும் போயிடாதீங்க”… மாஸ் வரிகளில் அதகளம்- வெளியான TOOFAN பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் பாடலான டூபான் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Mass buildup KGF chapter 2 toofan song released

மாலத்தீவில் தமன்னா.. முதல் முறையாக பிகினி, டூ பீஸ் நீச்சல் உடை.. தீயாய் பரவும் வீடியோ!

KGF-ன் வெற்றிவும் பார்ட் 2-வுக்கான எதிர்பார்ப்பும்

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் இந்திய மொழிகளில் ஹிட்டான கேஜிஎப், ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இணைந்த பாலிவுட் நட்சத்திரங்கள்

இரண்டாம் பாகத்தில் யாஷுடன்  சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் இந்த படத்தில் சஞ்சய் தத் அதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் பாலிவுட்டிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Mass buildup KGF chapter 2 toofan song released

பேன் இந்தியா ரிலீஸ்…

முதலில் கடந்த ஆண்டு 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோணா காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.  அதையடுத்து வரும்  ஏப்ரல் 14,2022 அன்று KGF-2 வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான  திரைகளில் இந்த படம் வெளியாக உள்ளது. கேஜிஎப் 2 ரிலிஸாகும் அதே நாளில் அமீர் கான் நடிப்பில் உருவாகும் லால் சிங் சட்டா படமும் ரிலீஸாவதாக இருந்தது.  ஆனால் படத்தின் பணிகள் இன்னும் முடியாததால் அந்த படத்தின் ரிலிஸ் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய அளவில் பெரிய போட்டிகள் இல்லாமல் கேஜிஎப் 2 ரிலிஸாகிறது.

Mass buildup KGF chapter 2 toofan song released

மாஸ் TOOFAN பாடல்

ஏப்ரல் 14 ஆம்  தேதி கேஜிஎப் 2 ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டனர். மார்ச் 21 ஆம் தேதி(இன்று) படத்தில் இடம்பெற்றுள்ள TOOFAN என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

Mass buildup KGF chapter 2 toofan song released

இதையடுத்து தற்போது டூஃபான் என்ற அந்த பாடல் வெளியாகியுள்ளது. கேஜிஎப் முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த “வீரா வீரா” பாடலைப் போலவே கதாநாயகன் ராக்கியின் வீர தீர சாகசங்களைப் பறைசாற்றும் மாஸ் பில்டப் வரிகளோடு வெளியாகியுள்ளது TOOFAN பாடல். முதல் பாகத்தின் இறுதியில் கேஜிஎப்பை கைப்பற்றிவிடும் ராக்கி அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இந்த பாடலில் சில வரிகளும், இடம்பெற்றுள்ள புகைப்படங்களும் அமைந்துள்ளன. நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. தமிழில் இந்த பாடலை பாடலாசிரியர் மதுரகவி எழுதியுள்ளார்.

நிறைமாத கர்ப்பத்துடன் நீச்சல் உடையில் காஜல் அகர்வால்... கணவருடன் வெளியிட்ட போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Mass buildup KGF chapter 2 toofan song released

People looking for online information on KGF Chapter 2, KGF chapter 2 toofan song, KGF2, Prashanth Neel, Toofan song, Yash will find this news story useful.