''ராதிகா கிட்ட இது பிடிக்காது, அவங்க கோபப்படக்கூடாது'' - சரத்குமார் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரத்துள்ள படம் 'வானம் கொட்டட்டும்' படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சரத்குமாரும் நடிகை ராதிகாவும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை தனா இயக்கியுள்ளார்.

இந்த பட அனுபவம் குறித்து பேசிய சரத்குமார், இயக்குநர் தனா இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் கதையை எங்கள் இருவருக்கும் கூறினார். கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது. இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார். ராதிகாவிடம் கோவம் மட்டும் தான் பிடிக்காத விஷயம். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். கோவத்தை உடனே வெளிப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து'' என்றார்.
பின்னர் பேசிய சரத்குமார், இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. பலரும் கதை கூறி இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லை. தனா கூறியகதையைக் கேட்டதும் எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. இப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். நடிப்பில் இருவருக்கும் எப்பொழுதும் போட்டி இருந்தது கிடையாது என்றார்.
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.