Reliable Software
www.garudabazaar.com

மணிமேகலை எமோஷனலாகி வெளியிட்ட பதிவு... " அதையெல்லாம் மறக்க முடியாது".. வைரல் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

manimegalai emotional post goes viralமணிமேகலை எமோஷனலாகி வெளியிட்ட பதிவு.

குக் வித் கோமாளி இரண்டாம் சீசனின் பைனல்ஸ் தற்போது நடைபெற்று வருக்கிறது. இந்த பைனலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது என்கிற ஏக்கம் தான் பலரது முகத்திலும் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனன்ஸ் நிகழ்ச்சி தற்போது நடந்து முடிந்துள்ளது. அதிலும் சர்ப்ரைஸாக நடிகர் சிம்பு இந்த பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு இன்று மதியம் 2 மணி முதல் தொடர் ஒளிபரப்பாகி வருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தற்போது சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். மணிமேகலை கூறும்போது "இன்று #CookWithComali இறுதி அத்தியாயத்தில் 🙃 என் அழகான குக் வித் கோமாளி குடும்பத்துடன் நான் அனுபவித்த அனைத்து வேடிக்கையான நேரங்களும் முடிவுக்கு வந்துள்ளன! அனைத்து வார இறுதிகளில் நீங்கள் எங்களுக்கு பொழிந்த அன்பை மறக்க முடியாது 🐒 எல்லாவற்றிற்கும்  நன்றி. விஜய் டிவி, டெச்னீசியன்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் இந்த அற்புதமான நினைவுகளை எனக்கு கொடுத்ததற்காக குக் வித் கோமாளியின் முழு குழுவிற்கும் நன்றி" என்று எமோஷனலாக கூறியுள்ளார்.

மணிமேகலை எமோஷனலாகி வெளியிட்ட பதிவு... " அதையெல்லாம் மறக்க முடியாது".. வைரல் பதிவு..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

manimegalai emotional post goes viralமணிமேகலை எமோஷனலாகி வெளியிட்ட பதிவு.

People looking for online information on Manimegalai will find this news story useful.