Annatha Others ua
Jai been others
www.garudabazaar.com

LATEST: பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறிய மாஸ் ஹீரோவின் புதிய படம்! வெளியான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ராஷிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார்.

Mahesh Babu Sarkaru Vaari patta movie out from pongal race

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதிகளில் நடந்து வருகிறது.

  1. Mahesh Babu Sarkaru Vaari patta movie out from pongal race

'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்ற ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை அடுத்தாண்டு (2022) பொங்கல் மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

Mahesh Babu Sarkaru Vaari patta movie out from pongal race

ஆனால் இதே பொங்கல் 2022 அன்று ராதே ஷ்யாம், RRR, வலிமை, பீம்லா நாயக் போன்ற பெரிய படங்கள் வெளியாவதால் படத்தின் வெளியீடு ஏப்ரல் 1,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu Sarkaru Vaari patta movie out from pongal race

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu, Parasuram, Pongal Race will find this news story useful.