www.garudabazaar.com

DON'T MISS: சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் கலக்கும் புதிய படத்தின் மாஸ் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் 46வது பிறந்தநாள்.

superstar mahesh babu keerthy suresh sarkaru vaari patta teaser

"கீதா கோவிந்தம்" புகழ் பரசுராம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பட்டா' படம் உருவாகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மகேஷ் பாபுவின் பிறந்தநாளான இன்று நள்ளிரவில் 'சர்காரு வாரி பட்டா ' படத்தின் டீசரை வெளியிட்டனர்.

superstar mahesh babu keerthy suresh sarkaru vaari patta teaser

டீசர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்கள் மனதைக் கவரும் வண்ணம் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு ஆடம்பரமான சிவப்பு நிற காரில் இருந்து வெளியே வந்து, ஒரு பஞ்ச் டயலாக் பேசி, குண்டர்களை அடிக்கிறார். ஒரு சிறிய வட்டமான காதணி, நீண்ட தலைமுடியுடன், காதுக்கு பின்னால் ஒரு ரூபாய் நாணயத்தை பச்சை குத்திக் கொண்டிருப்பது போன்ற ஸ்டைலில் வருகிறார். 

superstar mahesh babu keerthy suresh sarkaru vaari patta teaser

இந்த திரைப்படத்தை ஜனவரி 13, 2022 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

superstar mahesh babu keerthy suresh sarkaru vaari patta teaser

ஆர் மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

 

DON'T MISS: சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் கலக்கும் புதிய படத்தின் மாஸ் டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

superstar mahesh babu keerthy suresh sarkaru vaari patta teaser

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu, Sarkaru Vaari Paata will find this news story useful.