www.garudabazaar.com

செல்வராகவன் நடிக்கும் சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் ரோல் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராக்கி பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாணிக் காயிதம்'.

KEERTHY SURESH DIFFERENT CHARACTER FROM SELVARAGHAVAN'S NEXT

அருண் மாதேஸ்வரன் இயக்குனர் தியாகராஜா குமராராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இது நடிகராக செல்வராகவனுக்கு அறிமுகப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவு அடைந்துள்ளது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

KEERTHY SURESH DIFFERENT CHARACTER FROM SELVARAGHAVAN'S NEXT

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி படம் குறித்த படங்களையும் அப்டேட்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 80 களின் பிற்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கிரைம் டிராமாவாக உருவாகி உள்ளது.

KEERTHY SURESH DIFFERENT CHARACTER FROM SELVARAGHAVAN'S NEXT

இந்த படத்தின் டிரெய்லர், டீசர் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தில் செல்வராகவனுக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் தயாராகி உள்ளது. 

KEERTHY SURESH DIFFERENT CHARACTER FROM SELVARAGHAVAN'S NEXT

People looking for online information on Keerthy Suresh will find this news story useful.