'நீங்க சிரிச்சு பல வருஷம் ஆச்சுனு நினைக்குறேன்' - 'ஹீரோ' பட டீம் குறித்து பிரபல நடிகர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 05, 2019 05:07 PM
'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தை 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலைியல் இந்த படத்தின் எடிட்டர் ரூபன், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சீரியஸான போஸ் புரொடக்ஷன், நண்பர்களின் ரீயூனியனும் போய்ட்டு இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள நடிகர் மகேந்திரன், ''நீங்க எல்லோரும் சீரியஸா தான் இருக்கீங்க நீங்க சிரிச்சு பல வருஷம் ஆச்சுனு நினைக்கிறேன்'' என்று பதிலளித்துள்ளார்.
Hahahahaha wat a woow😵 yes.....neengha ellarum paaka serious ah dhan irrukingha 🤔 neengha sirichi pala varusham aachu nu ninaikuran😛😛😂😂
— மஹி🌟 (@Actor_Mahendran) December 5, 2019