90 வயதில் கொரோனா.. இறக்கும் முன் இளம் தலைமுறைக்கு செய்த தியாகம் - பிரபல இயக்குநர் பதிவு.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே போகிறது.
இந்நிலையில் துருவங்கள் பதினாறு, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சுசேன் (Suzanne Hoylaerts) என்பவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசத்திற்காக வென்டிலேட்டர் பொருத்த முற்பட, நான் வாழ்ந்து முடித்தவள், இந்த வென்டிலேட்டரை இளம் தலைமுறைக்கு பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார் சுசேன். இதையடுத்து அவர் நேற்று காலமானார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ள கார்த்திக் நரேன், அவரை கடவுள் என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.