இயக்குனர் P. வாசுவின் சித்தப்பாவும்.. பழம்பெரும் ஒளிப்பதிவாளருமான M.C. சேகர் காலமானார்..
முகப்பு > சினிமா செய்திகள்பழம்பெரும் ஒளிப்பதிவாளர் M.C. சேகர் காலமானார்.
1986 ஆம் ஆண்டு அறிமுகமான சேகர், ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள் (பி. வாசுவின் அறிமுக திரைப்படம்), பணக்காரன், உழைப்பாளி, சேதுபதி ஐ.பி.எஸ், வால்டர் வெற்றிவேல், ரிக்ஷா மாமா, லவ் பேர்ட்ஸ், கூலி, ராஜ ரிஷி, இன்று போய் நாளை வா, நீதியின் நிழல் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்.
150 படங்களுக்கு மேல் தமிழ் & மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் எம்.சி.சேகர். வயது முதிர்வு காரணமாக தமது 91 வது வயதில் சேகர் இன்று காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் பி. வாசுவின் தந்தை பீதாம்பரம் நாயரின் தம்பி தான் ஒளிப்பதிவாளர் எம்.சி. சேகர். இயக்குனர் பி. வாசுவின் ஆஸ்தான கேமரா மேனாக செயல்பட்டவர். பீதாம்பரம் நாயர், எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றியவர். தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 25 படங்களைத் தயாரித்து, முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
ஒளிப்பதிவாளரான எம்.சி.சேகர் & இயக்குனர் பி. வாசுவின் தந்தை பீதாம்பரம் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Raghava Lawrence In Chandramukhi 2 | Raining Sequels In Kollywood, Which One Are You Pumped About? - Slideshow
- Exclusive : What Happened To Vijay's Hollywood Film? | Top 10 News Of This Week (Apr 9 - Apr 15) - Slideshow
- Sivalinga | List Of Films Remade In Tamil Cinema In The Last 5 Years - Slideshow
- Sivalinga - Photos
- Sivalinga
- Sivalinga - Videos