"நான் அப்படி சொன்னதை, வடிவேலு தவறாக புரிந்து கொண்டார்" - விளக்கமளித்த விவேக்.
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் முடிசூடா காமெடி ஸ்டாராக உயர்ந்து நிற்பவர் விவேக். அவரது பொதுநலன் சார்ந்த காமெடிகள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் அளவில் இருக்கும். முக்கிய வேடத்தில் விவேக் நடித்த 'தாராள பிரபு' படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

நமது Behindhoods சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அப்படி நடிகர் வடிவேலுவுடன் எப்போவாவது மனஸ்தாபம் வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு, "தொழில் ரீதியாக இருவருக்கும் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. ஆனால் ஒரே ஒரு முறை ஒரு சின்ன மனஸ்தாபம் வந்திருக்கிறது"
" 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, அவர் சிறப்பாக பேசினார். அப்போது நான் 'வரிசையா பேசுறியே. யார் கிட்டாயாவது எழுதி வாங்கினியா' என்று கேட்டு விட்டேன் அதற்கு அவர் 'அட போடா நான் சுயமா பேசுனதுடா' என்று கூறினார். அது மட்டும் ஒரு சின்ன முரணான விஷயம் எங்களுக்குள் நடந்தது. நான் பல பேட்டிகளில் அவரைப் பற்றி பேசியுளேன். அனால் அவர் எந்த பேட்டியிலும் என்னைப் பற்றி பேசுவதில்லை, இருந்தாலும் அவர் மேல் இருக்கும் மதிப்பு என்றைக்கும் எனக்கு குறையவில்லை" என்று கூறியுள்ளார்.
"நான் அப்படி சொன்னதை, வடிவேலு தவறாக புரிந்து கொண்டார்" - விளக்கமளித்த விவேக். வீடியோ