இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய முயற்சியை எடுத்துள்ள குட்டி ஸ்டோரி படக்குழுவினர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிறு கதைகளை ஒன்றாக இணைத்து தரும் படங்களுக்கு 'ஆந்தாலஜி' என்று பெயர். தமிழ் சினிமாவில் தற்போது இம்மாதிரி படங்கள் அதிகரித்து வருவதை காண முடிகிறது. 'சில்லுக்கருப்பட்டி'யில் துவங்கி சமீபத்தில் வெளியான 'பாவக்கதைகள்' வரை ஆந்தாலஜி படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

kutty story film new technical attempt குட்டி ஸ்டோரி படத்தின் புதிய முயற்சி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றி இருக்கும் ஆந்தாலஜி படத்திற்கு 'குட்டி ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'வேல்ஸ் பிலிம்  இன்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,அமலாபால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், சாக்ஷி அகர்வால், வருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க காதல் சார்ந்த படம் என்பது போல் ஹின்ட் கொடுத்துள்ளனர். மேலும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபு இயக்கும் 'லோகம்' என்ற பகுதி கேமிங் தொழில்நுட்பம் பற்றிய முழுக்க முழுக்க அனிமேஷன்  செய்யப்பட்ட பகுதி என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முதன்முறை எடுக்கப்பட்டுள்ள முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

kutty story film new technical attempt குட்டி ஸ்டோரி படத்தின் புதிய முயற்சி

People looking for online information on Kutty Story will find this news story useful.