Video: 'விஜய் சேதுபதியுடன்' Romance பண்றப்ப 'அழுதுட்டேன்!'.. 'குட்டி ஸ்டோரி' சீக்ரெட்ஸ் பகிரும் அதிதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் அடுத்த ஆந்தாலஜி படமாக, 'எதிர்பாரா முத்தம்', 'அவனும் நானும்', 'லோகம்', 'ஆடல்-பாடல்' என நான்கு கதைகளை முறையே கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கிய குட்டி ஸ்டோரி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

குட்டி ஸ்டோரி அதிதி பாலன் Kutty Story Aditi Balan

இப்படத்தில் நலன் குமாரசாமி இயக்கிய ‘ஆடல் பாடல்’ பகுதியில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள அதிதி பாலன் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு விஜே நிக்கியின் நேர்காணலில் அளித்து பிரத்யேக ஜாலி பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அருவி திரைப்படம் மூலம் நேரடியாக அறிமுகமாகியிருந்தாலும், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் பின்னணி டான்சராக தோன்றியதை குறிப்பிட்டுள்ளார்.  ‘தண்ணி (குடிநீர்) இல்லாம இருக்கவே முடியாது’ என ஜாலி கேலியாக ராப்பிட் ஃபயர் ரவுண்டில் பேசிய அவர், சிவராத்திரி தூக்கமேது பாடலையும் பாடி அசத்தினார்.

குட்டி ஸ்டோரி அதிதி பாலன் Kutty Story Aditi Balan

குட்டி ஸ்டோரி படத்தில் அதிதி நடித்த சென்சேஷனல் கதாபாத்திரம் படம்  வெளியாவதற்கு முன்னமே ஸ்னீக் பீக்காக வெளியாகி வைரலானது. படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கும் அதிதி கதாபாத்திரத்துக்குமான உறவு என்ன என்பதை ஊகிக்க முடிந்தாலும் கதை என்ன என்பதை காண்பதற்கு ஆவலாகினர். 

தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களையே மையமாக வைத்து எடுக்கப்படும் பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால், தான் மௌனம் காத்ததாகவும், நலன் - குமாரசாமி விஜய் சேதுபதியுடனான இந்த கூட்டணியில் பணிபுரியும் அந்த அனுபவத்துக்காக இந்த படத்தில் நடித்ததாகவும், படத்தில் விஜய் சேதுபதியுடன் வரும் ரொம்பான்ஸ் போர்ஷன்களை நடிக்கும் அனுபவம் புதிதாக இருந்ததால் சற்றே தயங்கி சிரமப்பட்டதாகவும் பின்னர் அந்த போர்ஷன்கள் நன்றாகவே வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குட்டி ஸ்டோரி அதிதி பாலன் Kutty Story Aditi Balan

விஜய் சேதுபதியை பொறுத்தவரை, அவர் தன்னுடைய கதாபாத்திரத்துக்கான நடிப்பை உடனே இயல்பாகவே வெளிப்படுத்தி நடிக்கும் திறமை வாய்ந்தவர் என்றும், லாக்டவுன்ல எல்லோரும் அழுத்தமான மனதுடன் இருக்கும்போது, ஃபீல் குட்டாக, லைட்டாகவும், ஜாலியாகவும் ஒரு படத்தை பார்க்க நினைத்தால் இந்த படத்தை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

ALSO READ: ‘ஒரு வருஷ காத்திருப்புக்கு அப்றம்’.. வந்தாச்சு ‘தல’ அஜித்தின் வலிமை படத்தின் ‘அதகளமான அப்டேட்’!.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

VIDEO: 'விஜய் சேதுபதியுடன்' ROMANCE பண்றப்ப 'அழுதுட்டேன்!'.. 'குட்டி ஸ்டோரி' சீக்ரெட்ஸ் பகிரும் அதிதி! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

குட்டி ஸ்டோரி அதிதி பாலன் Kutty Story Aditi Balan

People looking for online information on Aditi Balan, அதிதி பாலன், குட்டி ஸ்டோரி, பேட்டி, விஜய் சேதுபதி, Kutty Story, Vijay Sethupathi will find this news story useful.