''நீயே இப்படி பண்ணலாமா சித்து.." - சித்ராவின் மறைவு செய்தி கேட்டு கலங்கிய KPY தீனா
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சித்ராவின் மறைவுக்கு குறித்து காமெடி நடிகர் தீனா எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவர் நடித்த முல்லை கதாபாத்திரம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, இவர் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் இன்று சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ராவின் மறைவு குறித்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அவருடன் இருக்கும் போட்டோவுடன், ''நீயே இப்படி பண்ணலாமா சித்து.. ரொம்ப கஷ்டமா இருக்கு'' என கண்ணீர் வடிப்பது போல இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார் தீனா.