''தூக்குமேடை வரை இவனுக்கு''.! - நடிகை குஷ்பூ ஆவேசம். என்ன காரணம் தெரியுமா.?
முகப்பு > சினிமா செய்திகள்10 வயது குழந்தையை கற்பழித்து கொன்றவனை பற்றி நடிகை குஷ்பூ ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ஆகியோர் நடிக்கின்றனர். சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் குஷ்பூ நீண்டகாலமாகவே ஆர்வம் காட்டி வருகிறார். இதையடுத்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பத்து வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனின் செய்தியை ஷேர் செய்திருக்கிறார். மேலும் இந்த மாதிரி கொடிய மிருகத்துக்கு எந்த கருனையும் வழங்கப்பட கூடாது, தூக்கு மேடை ஏறும் வரை ஏழு வருடங்களுக்கு இவனை வாழ வைத்து கொண்டிருக்க கூடாது என்று நம்புகிறேன்'' என அவர் பதிவிட்டுள்ளார்.
Hope this monstrous beast will not be shown any mercy or fed for the next 7 yrs before sending him to gallows. pic.twitter.com/N0UC8tAbOI
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 22, 2020