ET Others
www.garudabazaar.com

”தாய விட உயர்ந்த சக்தி எதுவும் இல்ல”… கேஜிஎப் 2 வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎப் 2 படக்குழு பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்புப் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Kgf team released a special poster for womens day

இந்தியாவைக் கலக்கிய கேஜிஎப்

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் இந்திய மொழிகளில் ஹிட்டான கேஜிஎப், ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

வில்லனாக சஞ்சய் தத்

இரண்டாம் பாகத்தில் யாஷுடன்  சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் இந்த படத்தில் சஞ்சய் தத் அதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் பாலிவுட்டிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Kgf team released a special poster for womens day

கொரோனாவால் தாமதம்

முதலில் கடந்த ஆண்டு 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோணா காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.  அதையடுத்து வரும்  ஏப்ரல் 14,2022 அன்று KGF-2 வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான  திரைகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

பேன் இந்தியா ரிலிஸ்

கேஜிஎப் 2 ரிலிஸாகும் அதே நாளில் அமீர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் சட்டா படமும் ரிலீஸாவதாக இருந்தது.  ஆனால் படத்தின் பணிகள் இன்னும் முடியாததால் அந்த படத்தின் ரிலிஸ் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய அளவில் பெரிய போட்டிகள் இல்லாமல் கேஜிஎப் 2 ரிலிஸாகிறது.

Kgf team released a special poster for womens day

பெண்கள் தின சிறப்பு போஸ்டர்

கேஜிஎப் ஒன்றாம் பாகம் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டதோ அதுபோலவே தாய்ப்பாச செண்ட்டிமெண்ட் காட்சிகளுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் இருந்தது. படத்தின் முக்கியமானக் காட்சிகள் அனைத்திலும் கதாநாயகன் ராக்கிக்கு அவனின் அம்மா சொன்ன அறிவுரையை உதவும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இன்று உலக பெண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கேஜிஎப் 2 படக்குழுவினர் அதை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ராக்கியின் அம்மா படம் மட்டும் இருக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

Tags : Yash, Kgf 2

தொடர்புடைய இணைப்புகள்

Kgf team released a special poster for womens day

People looking for online information on Kgf 2, Yash will find this news story useful.