www.garudabazaar.com

போடு… ஐபிஎல் பயோ பபுளுக்குள் சென்ற ராக்கி பாய்…. பிரபல Team-காக சிறப்புக் காட்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

KGF 2 special show for RCB team in bio bubble

ரசிகர்களின் மனதில் அமர்ந்த ராக்கி…

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎஃப் 2 தமிழில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த 10,000 திரையரங்குகளில்  தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. வெளியானது முதல் உலகம் எங்கும் அமோகமான வரவேற்பை கேஜிஎஃப் 2 பெற்றுவருகிறது.

இந்த படத்தில் யாஷுடன், ஸ்ரீநிதி ஷெட்டி,  பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். மேலும் 19 வயது உஜ்வல் குல்கர்னி இந்த படத்தை எடிட் செய்துள்ளார்.

KGF 2 special show for RCB team in bio bubble

கேஜிஎஃப் 2 வசூல்…

கேஜிஎஃப் 2 வெளியானது முதல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் 240 கோடி ரூபாயை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் சிறப்பான வசூலை செய்து வருகிறது. பல புறநகர்ப் பகுதிகளில் படத்துக்குக் கூட்டம் அதிகமாக வருவதாக கூடுதலாக நாற்காலிகள் போட்டு காட்சிகள் திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே நள்ளிரவு காட்சிகள் மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன.

KGF 2 special show for RCB team in bio bubble

கேஜிஎஃப் 2 பார்த்த RCB….

இந்நிலையில் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ஐபிஎல் அணிகளுள் ஒன்றான RCB அணிக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் பார்த்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான hombale films நிறுவனம் சமூகவலைதளத்தில் பகிர, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ஐபிஎல் தொடரில் பயோபபுள் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளதால் அதற்கேற்றவாறு இந்த சிறப்புக் காட்சி ஏற்பாடாகியுள்ளது.

KGF 2 special show for RCB team in bio bubble

தொடர்புடைய இணைப்புகள்

KGF 2 special show for RCB team in bio bubble

People looking for online information on IPL 2022, Kohli, RCB, Yash will find this news story useful.