www.garudabazaar.com

TRENDING: சூப்பர் டூப்பர் ஹிட்டான ஆலம்பனா படத்தின் "எப்போ பார்த்தாலும்" சிங்கிள் பாடல்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் வைபவ், பார்வதி நாயர், முனீஸ்காந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருந்த படம் 'ஆலம்பனா'.

Eppa Paarthaalum Red heart Flying high with 10M Views

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இயக்குனர் பாரி கே விஜய் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Eppa Paarthaalum Red heart Flying high with 10M Views

ஹிப்ஹாப் தமிழா இசையில் அர்மான் மாலிக் பாடிய 'எப்போ பார்த்தாலும்' என்கிற முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியானது, வெளியானது முதலே ஹிட்டான இந்த பாடல் தற்போது  10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இதனை படநிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை நாயகி பார்வதி நாயரும் பகிர்ந்துள்ளார். 

Eppa Paarthaalum Red heart Flying high with 10M Views

இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பரவலாக கவனத்தை பெற்றது, முதல் லுக் போஸ்டர் கமல் நடித்த 'அலாவுதினும் அற்புத விளக்கும்' படத்தினை நினைவு படுத்துவதாக இருந்தது.

TRENDING: சூப்பர் டூப்பர் ஹிட்டான ஆலம்பனா படத்தின் "எப்போ பார்த்தாலும்" சிங்கிள் பாடல்!!! வீடியோ

Eppa Paarthaalum Red heart Flying high with 10M Views

People looking for online information on Hip Hop Tamizha Adhi, Vaibhav Reddy will find this news story useful.