4 ஆவது வாரத்தில் KGF 2… தமிழகத்தில் தற்போதைய நிலவரம் என்ன? தயாரிப்பாளர் SR பிரபுவின் viral Tweet!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF 2 பற்றி பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான எஸ் ஆர் பிரபு பகிர்ந்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.

SR Prabhu tweet about KGF2 running in tamilnadu 4th week

Also Read | ”நண்பன் STR…. Prince சிவகார்த்திகேயன்”… ஒரே நாளில் இரண்டு டிரைலர்…. SJ சூர்யா வைரல் tweet!

இந்திய ரசிகர்களைக் கவர்ந்த ராக்கி பாய்…

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியானது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. ரிலீஸானது முதல் இப்போது வரை வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.

SR Prabhu tweet about KGF2 running in tamilnadu 4th week

வசூல் வேட்டை…

கேஜிஎப் 2 திரைப்படம் பாகுபலி 2 மற்றும் RRR படங்களைப் போலவே வசூலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வெளியானது முதலே அங்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து படத்தைப் பார்த்து வருகின்றன. ரிலீஸாகி இன்று நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையிலிம் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதன் மூலம் ‘all time blockbuster’ படங்களில் ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SR Prabhu tweet about KGF2 running in tamilnadu 4th week

நான்காவது வார நிலவரம்….

இன்று KGF 2 திரைப்படம் வெளியாகி தனது நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் படத்தைத் தமிழகத்தில் வெளியிட்ட எஸ் ஆர் பிரபுவின் டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் தற்போது படம் எத்தனை திரைகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது பற்றிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அந்த டிவீட்டில் “கேஜிஎஃப் 2 நான்காவது வாரத்தில் 350 திரைகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. படத்துக்கு முதல் நாள் கிடைத்த வரவேற்பு எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னமும் இருக்கிறது. பெரிய திரையில் கிடைக்கும் உன்னத அனுபவத்தை மிஸ் செய்து விடாதீர்கள்” எனக் கூறியுள்ளார். வெளியாகி மூன்று வாரங்களுக்குப் பிறகும் இத்தனை திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பது சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SR Prabhu tweet about KGF2 running in tamilnadu 4th week

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

4 ஆவது வாரத்தில் KGF 2… தமிழகத்தில் தற்போதைய நிலவரம் என்ன? தயாரிப்பாளர் SR பிரபுவின் VIRAL TWEET! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SR Prabhu tweet about KGF2 running in tamilnadu 4th week

People looking for online information on KGF Chapter 2 Movie, KGF2, Prashanth Neel, SR Prabhu, SR Prabhu tweet, Yash will find this news story useful.