www.garudabazaar.com

“கேரளாவே பற்றி எரியும்!!”.. பிரபல Van life யூடியூபர்கள் கைது!.. குவிந்த ஆதரவாளர்கள்.. நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளாவில் விதிகளை மீறியதாக பிரபல யூடியூபர்ஸ் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் Van Life Tourism Videos என்பது மிகவும் பிரபலம். இதற்கு அச்சாரம் இட்டவர்கள்தான் Ebull jet சகோதரர்கள். இந்த சகோதரர்கள் Van Life Tourism வகையிலான நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த லிபின் - எபின் என்கிற Ebull jet சகோதரர்கள் தங்களுடைய யூடியூப் சேனலில், Van ஒன்றை வாழ்வதற்கான குட்டி நடமாடும் வீடு மாதிரி தயார் செய்து அந்த வேனில் சென்று வீடியோக்களை எடுத்து பதிவிடும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தனர். பலரும் இன்றைக்கு கேரளாவில் இதே வழியில் யூடியூப்களில் நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

இதனாலேயே இவர்களுக்கு அதிக ரசிகர்களும், சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர். இதனிடையே இவர்கள் அண்மையில் தங்களது வேனில், விதவிதமான விஷயங்களை பொருத்தி, வண்ணம் அடித்து ஒரு புதிய தோற்றத்திற்கு மாற்றியுள்ளனர். இதனை யூடிபில் பார்த்துவிட்டு கேரள போக்குவரத்து போலீசார் நேரடியாக இவர்களின் வீட்டுக்கே சென்று, இந்த வேனை பற்றி ஆய்வு செய்தனர். அப்போதுதான் போக்குவரத்து விதிகளை மீறி இந்த வேனின் வெளிப்புறத் தோற்றம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி, ஆர்டிஓ அலுவலகத்தில் வந்து, முறையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு வந்துள்ளனர்.

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

அதன்படி Ebull jet சகோதரர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களை சமர்ப்பித்த போது தான், ‘நெப்போலியன்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த வேனில் இருந்த கலர் விளக்குகள், Ebull jet சகோதரர்களின் உருவப்படங்கள், வேனின் டிசைன் உள்ளிட்ட அனைத்துமே மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளுக்கு புறம்பாக இருப்பதாக போலீசார் குறிப்பிட்டதோடு அதற்காக கண்டித்தனர். மேலும் இதற்காக 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நெப்போலியனையும்(Van) பறிமுதல் செய்தனர்.

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

ஆனால் Ebull jet சகோதரர்கள் இந்த அபராதத்திற்கு எதிராக கூச்சலிட்டு அதிகாரிகளிடம் முரண்டு பிடித்துள்ளனர். இதனிடையே அங்கு வந்த போலீசார் ஒருவர், ஆர்டிஓ அலுவலகத்தில் இவர்கள் நடந்துகொண்ட விதத்தால், இவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

Also Read: வலிமை 2-வது சிங்கிள் ரெடி ஆயிடுச்சா?... பிரபல இயக்குநர் தந்த வேறமாரி அப்டேட்! தீயாய் பரவும் Video!

ஆனால் இருவரும் போலீஸ் நிலையத்திற்கு செல்ல மறுத்தததை அடுத்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த  Ebull jet சகோதரர்களில் ஒருவர் இவற்றையெல்லாம் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்து பொங்கி எழுந்த இந்த Ebull jet சகோதரர்களின் சப்ஸ்கிரைபர்கள், சம்பந்தப்பட்ட கண்ணூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு எப்படியோ வந்து சேர்ந்துவிட்டனர். அவர்களும் ஒரு புறம் Ebull jet சகோதரர்களை வெளிவிட வேண்டும் என்று கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

அதிலும் சிலர் தங்களுக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உதவியை நாடினர். அதில் ஒருவர் பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு போன் செய்து இது பற்றி பேசியதுடன், அந்த ஆடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனிடையே பலரும் ட்விட்டரில் Ebull jet சகோதரர்களை வெளிவிட வேண்டும் என ஹேஷ்டேகுகளை ட்ரெண்டு செய்து நியாயம் கேட்டு வந்தனர்.

மேலும் சட்டவிரோதமாக மீது பொய் வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக, Ebull jet சகோதரர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கேரளாவில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகும் அளவுக்கு இந்த விவகாரம் போனது. சில ஆதரவாளர்கள் வன்முறை தொனியில், “கேரளாவே பற்றி எரியும்” என்பது போல பேசி எச்சரித்தனர். அவர்களுள் 12 பேரை காவல்துறையினர் கைது வழக்கு பதிவு செய்தனர்.

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

இதனிடையே போலீஸ் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த Ebull jet சகோதரர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது, இந்த அபராதம், இந்த கொரோனா நேரத்தில் ஏழைகளிடம் இருந்து பணம் பறிக்கும் செயலாக உள்ளது என்றும், காவல்துறையினர் தங்களை தீவிரவாதிகள்; கொலை காரர்கள் போல நடத்துவதாகவும் கூறி வாதாடினர். இவர்களின் வாதங்களுக்குப் பின்பு இவர்கள் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

Also Read: ரஜினி-யின் "அண்ணாத்த" .. அடுத்த கட்ட ஷூட் எங்கே? எப்போ? .. விசில் பறக்கும் அப்டேட்!

பின்னர் இவர்கள் தொடுத்த ஜாமீன் மனுவில் அபராதம் கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். எனினும் இவர்கள் மீது, அந்த 9 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 2 பிரிவுகள் ஜாமீனில் கூட வெளிவராத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

“கேரளாவே பற்றி எரியும்!!”.. பிரபல VAN LIFE யூடியூபர்கள் கைது!.. குவிந்த ஆதரவாளர்கள்.. நடந்தது என்ன? வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kerala Vanlife YouTubers Ebulljet Brothers arrested

People looking for online information on EbulljetBrothers, EbulljetVideos, Kerala, Police, Vanlife, Youtubers, YouTubersReact will find this news story useful.