www.garudabazaar.com

கேரளாவில் பிரசித்தி பெற்ற மாலில் முதல் IMAX தியேட்டர்.. அதுவும் இந்த ஊர்லயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளாவின் முதல் IMAX திரையரங்கம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

Kerala first IMAX In Thiruvananthapuram PVR CINEMAS Superplex Lulu Mall

Also Read | சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம்.. அமெரிக்காவுல மட்டும் இத்தனை கோடி வசூலா?

IMAX என்பது ‘இமேஜ் மாக்சிசம்’ என்பதன் சுருக்கமான வடிவமாகும்,  IMAX திரைப்படங்கள், சாதாரண படங்களை விட பெரிய அளவிலும் உச்சபட்ச தெளிவுத்திறனிலும் படமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.

சிறப்பு கேமரா மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மட்டுமே IMAX திரைப்படங்களை உருவாக்க முடியும்.

IMAX திரையரங்குகளில் படம் பார்க்க சாதாரண திரையரங்குகளை விட மூன்று மடங்கு அதிக டிக்கெட் கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கின்றன.  அதற்கு காரணம் பிரம்மாண்டமான திரைகளும் பிரத்யேக சப்தங்களுமே.

Kerala first IMAX In Thiruvananthapuram PVR CINEMAS Superplex Lulu Mall

IMAX என்பது உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், திரைப்பட வடிவங்கள், ஃபிலிம் ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் தனியுரிமை அமைப்பாகும், இது உயரமான அகண்ட திரைகளுடன் (Aspect Ratio 1.43:1 அல்லது 1.90:1) நிறைய இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய திரைகளைக் கொண்டது.

ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டர் இந்தியாவில் சிறந்த IMAX ஆக உள்ளது. அதன் 72-அடி உயரம், 95-அடி அகல திரை உடன் 635 இருக்கைகள் மற்றும் 12,000-வாட் ஒலி அமைப்பு சிட்னி ஐமாக்ஸ் திரையரங்கிற்கு அடுத்து மிகப்பெரிய IMAX திரை இது தான். உலகின் இரண்டாவது பெரிய IMAX 3D திரை ஆகும்.

Kerala first IMAX In Thiruvananthapuram PVR CINEMAS Superplex Lulu Mall

IMAX உலகம் முழுவதும் 1,400க்கும் மேற்பட்ட திரைகளைக் கொண்டுள்ளது. IMAX ஈடுயிணையற்ற விஷூவல் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

இந்நிலையில் கேரளாவில் முதல் ஐமாக்ஸ் திரையரங்கம் துவங்கப்பட உள்ளது.  சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய தகவலாக இது அமைந்துள்ளது. திருவனந்தபுரம் நகரில் உள்ள லுலு மாலில் உள்ள PVR CINEMAS Superplex-ல் இந்த ஐமாக்ஸ் திரை அமைந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த ஐமாக்ஸ் திரையரங்கு துவங்கப்பட உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Kerala first IMAX In Thiruvananthapuram PVR CINEMAS Superplex Lulu Mall

தற்போது கொச்சி & கோயம்புத்தூரிலும் ஐமாக்ஸ் திரையரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Kerala first IMAX In Thiruvananthapuram PVR CINEMAS Superplex Lulu Mall

People looking for online information on Imax, IMAX theatre, Kerala first IMAX, Lulu Mall, PVR CINEMAS Superplex, Thiruvananthapuram will find this news story useful.