கொரோனாவால் கணவன் வெளிநாட்டில்.. மனைவி இங்கே - பிரபல இயக்குநர் பகிர்ந்த இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.

கத்துக்குட்டி படத்தை இயக்கியவர் இரா.சரவணன். விவசாய பிரச்சனைகளை மையப்படுத்தி உருவான இத்திரைப்படத்தில் நரேன், ஷ்ருஷ்டி டாங்கே, சூரி உள்ளிட்டோர் நடித்தனர். இதையடுத்து இவர் தற்போது சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை சூர்யாவின் 2D Entertaintment நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''நிறுவனம் அனுமதித்த போதும் அபுதாபி விமான பொறியாளரான நண்பன் அன்பரசன் தன்னால் தொற்று பரவக்கூடாது என தாய்மண் வருவதை தவிர்த்தான். புதுவையில் செவிலியராக பணியாற்றும் அவர் மனைவி தன் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். கொரோனா தடுப்பில் அர்ப்பணிப்பான குடும்பம்' என அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
நிறுவனம் அனுமதித்த போதும் அபுதாபி விமான பொறியாளரான நண்பன் அன்பரசன் தன்னால் தொற்று பரவக்கூடாது என தாய்மண் வருவதை தவிர்த்தான். புதுவையில் செவிலியராக பணியாற்றும் அவர் மனைவி தன் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். கொரோனா தடுப்பில் அர்ப்பணிப்பான குடும்பம்! pic.twitter.com/NIgFdiRecZ
— இரா.சரவணன் (@erasaravanan) March 26, 2020