www.garudabazaar.com
iTechUS

BREAKING: போடு.! கார்த்தியுடன் இணைந்த 96 பட இயக்குனர்.? '2D' தயாரிப்பா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிரேம் குமார் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

Karthi Premkumar 96 Fame Movie Titled as jallikattu Deets

Also Read | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா.. போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

'விருமன்'  'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' படங்களின் வெற்றிக்கு பிறகு கார்த்தி ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த ஜப்பான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்றது.

Karthi Premkumar 96 Fame Movie Titled as jallikattu Deets

இந்நிலையில் கார்த்தி, மீண்டும் நடிகர் சூர்யா தயாரிப்பில் 2டி நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைக்குட்டி சிங்கம், விருமன் படங்களை தொடர்ந்து கார்த்தி படத்தை சூர்யா தயாரிக்க உள்ளார். இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஜல்லிக்கட்டு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு மத்தியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சில தகவல்கள் பரவலாக இருந்து வந்தது.Karthi Premkumar 96 Fame Movie Titled as jallikattu Deets

அப்படி இருக்கையில், படத்தின் பெயர் ஜல்லிக்கட்டு இல்லை என்பது பற்றி இயக்குனர் பிரேம் குமார் தரப்பில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. அதன்படி, கார்த்தியின் அடுத்த படத்தை பிரேம்குமார் இயக்குவது உண்மை தான் என்பதும், அதே வேளையில் படத்தின் பெயர் ஜல்லிக்கட்டு இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | சூரிக்கு ஜோடியாகும் மலையாள நடிகை.. பூஜை புகைப்படங்களுடன் வெளியான புது பட அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Premkumar 96 Fame Movie Titled as jallikattu Deets

People looking for online information on Karthi, Premkumar, Surya will find this news story useful.