Michael Coffee house
Reliable Software
www.garudabazaar.com

"Kho Kho-வை தியேட்டர்ல இருந்து திரும்பப் பெறுகிறோம்".. கனத்த இதயத்துடன் 'கர்ணன்' ஹீரோயின் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன். இதனைத் தொடர்ந்து ரஜிஷா விஜயன் நடித்து மலையாளத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி கோகோ திரைப்படம் வெளியானது.

Karnan heroine rajisha vijayan disheartening post kho kho

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக திரையரங்கில் திரையிடப்பட்டு வரும் இப்படக் காட்சிகள் கோ கோ படக்குழுவினரால் நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடவோ பரவிவிடவோ கூடாது என கருதிய படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி இந்த படத்தைப் பற்றி மேலும் பகிர்ந்து கொள்ள ரஜிஷா தமது சமூக ஊடகங்களில், “தற்போதைய கோவிட் 19 தொடர்பான நெருக்கடி காரணமாக கேரளாவின் திரையரங்குகளில் இருந்து கோ கோ-வை திரும்பப் பெறுவதற்கான முடிவை நாங்கள் கனத்த இதயத்துடன் எடுத்து வருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)

மேலும் தமது பதிவில், “எங்கள் படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்ப்பதையே நாங்கள் விரும்பியிருந்தோம் என்றாலும், எங்கள் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் நாங்கள் முன்னுரிமையாகக் கொண்டிருக்க வேண்டும். தயவுசெய்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள். கோ கோ விரைவில் மற்றொரு தளத்தின் மூலம் உங்களை அடையும். இதுவும் கடந்து போகும். ” என தெரிவித்துள்ளார்.

ALSO READ: "அந்த பட டைம்ல ஒரு பொண்ண பாத்தேன்!".. ஐஸ்வர்யா ராஜேஷின் கண்கலங்க வைக்கும் பேச்சு!

மேலும் செய்திகள்

Karnan heroine rajisha vijayan disheartening post kho kho

People looking for online information on Kho Kho, Rajisha Vijayan will find this news story useful.