www.garudabazaar.com

"ஹிந்தி'ய விடுங்க.. சமஸ்கிருதம் ஏன் தேசிய மொழியா இருக்க கூடாது?.." கங்கனா பரபரப்பு பேச்சு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த KGF 2 திரைப்படம், இந்தியா முழுவதும் மிகப் பெரிய ஹிட்டடித்து வருகிறது.

Kangana Viral Statement On National Language Row

அந்த சமயத்தில், கன்னட நடிகர் சுதீப், இந்தி இந்திய தேசிய மொழி இல்லை என கூறி இருந்தார்.

சுதீப்பின் கருத்திற்கு, பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அஜய் தேவ்கன், பதிலளித்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

ஹிந்தி தேசிய மொழியா?

ஹிந்தியில் அவர் எழுதி இருந்த ட்வீட்டில், ஹிந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், சுதீப் ஏன் தனது தாய்மொழி படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறனர் என கேள்வி எழுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சுதீப் தன்னுடைய நிலைப்பாட்டினை தெரிவிக்க, தொடர்ந்து அஜய் தேவ்கனும் மீண்டும் ஒரு ட்வீட்டை செய்திருந்தார்.

அதில், "வணக்கம் கிச்சா சுதீப், நீங்கள்  நண்பர். தவறான புரிதலை விளக்கியதற்கு நன்றி. நான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், நம் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதோ தவறியிருக்கலாம்" என குறிப்பிட்டிருந்தார்.

பிரபலங்கள் சொன்ன கருத்து..

இரு பிரபல நடிகர்கள் ஹிந்தி மொழி குறித்து கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், மற்ற சில பிரபலங்கள் மொழி குறித்த தங்களின் நிலைப்பாட்டினை தெரிவித்து அஜய் தேவ்கன் அல்லது கிச்சா சுதீப்பிற்கு தங்களின் ஆதரவினை தெரிவித்து வந்தனர். கடந்த சில நாட்களாக, ஹிந்தி தேசிய மொழியா என்ற விவாதம் உருவாகி வர, தற்போது பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

"தமிழை விட சமஸ்கிருதம் தான்.."

தன்னுடைய அடுத்த திரைப்படமான 'தாகத்' டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரனாவத், "ஹிந்தி எங்கள் தேசிய மொழி என அஜய் தேவ்கன் கூறியது தவறில்லை என நான் கருதுகிறேன். மொழி வாரியாக வேற்றுமை கொண்டுள்ளது இந்தியா. தற்போதைய நிலவரத்தில், அரசியல் அமைப்புப்படி ஹிந்தி தான் நமது தேசிய மொழி. ஆனால், டெக்கினிக்கல் படி பார்த்தால், ஹிந்தியை விட தமிழ் பழமை ஆனது. அதை விட சமஸ்கிருதம் தொன்மை ஆனது.

ஹிந்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம் என அனைத்தையும் விட சமஸ்கிருதம் பழமை ஆனது. ஹிந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து கூட தோன்றிய மொழிகள். பின்னர் ஏன் சமஸ்கிருதம் நமது நாட்டின் தேசிய மொழியாக இருக்கக் கூடாது?. பள்ளிகளில் ஏன் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படவில்லை என்பதும் எனக்கு தெரியவில்லை" என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் விவாதத்தில் இரண்டு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவும் கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

"ஹிந்தி'ய விடுங்க.. சமஸ்கிருதம் ஏன் தேசிய மொழியா இருக்க கூடாது?.." கங்கனா பரபரப்பு பேச்சு.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Viral Statement On National Language Row

People looking for online information on Ajay devgan, Hindi language, Kangana Ranaut, Kiccha Sudeep, National Language, Sanskrit will find this news story useful.