Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

'பிரபல' டைரக்டர் கூட ரகசிய உறவு.. "Pregnant'ன்னு தெரிஞ்சதும் ஆள் Escape.." கலங்கிய நடிகை.. கங்கனாவின் 'Reaction'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி ரியாலிட்டி ஷோவான 'லாக் அப்'பில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சர்ச்சை சம்பவங்கள் மத்தியில் நடிகை கங்கனா ரனாவத் கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

kangana reaction after mandana karimi secret in lock upp

எந்தா கோபி, இனிமே நொந்த கோபி.. ராதிகா வைத்த 'செக்'.. இதுக்கு மேலயும் அவர யாரு காப்பாத்துறது?

ஹிந்தி மொழியில் பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து, பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவைப் போலவே, 'லாக் அப்' எனும் பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்று, ஹிந்தி மொழியில் 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க சிறை செட்அப்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அமெரிக்க சிறை போன்ற ஒரு இடத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 72 நாட்கள் அந்த இடத்தில் போட்டியாளர்கள் அனைவரும் கைதிகளாக இருக்க வேண்டும். மேலும், அந்த சிறை முழுவதும் கேமரா உள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களால் பார்க்க முடியும்.

kangana reaction after mandana karimi secret in lock upp

பல தடங்கல்கள், சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி, போட்டியில் நிலைத்து நிற்பவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்ச்சி பெறுவார்கள். மேலும், பார்வையாளர்களின் வாக்கு எண்ணிக்கை படி, போட்டியாளர்கள் அந்த சிறையில் இருந்து வெளியேற்றபடவும் செய்வார்கள்.

பூனம் பாண்டே செய்த காரியம்

24 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தாலும், சர்ச்சை காட்சிகளுக்கு என்று எந்த குறையுமே இல்லை. பல சர்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, மேலாடையை கழற்றி கேமரா முன்பு நின்றிருந்த காட்சிகள், பார்வையாளர்களை ஒரு நிமிடம் அதிர வைத்திருந்தது. அதே போல, கடந்த சில வாரங்களுக்கு முன், போட்டியாளர் ஒருவர் தொழிலதிபர் ஒருவரின் கண் முன் வைத்து, அவரது மனைவியுடன் உடலுறவு செய்திருந்தது பற்றி பேசி இருந்ததும், லாக் அப் பார்வையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தினை உண்டு பண்ணி இருந்தது.

kangana reaction after mandana karimi secret in lock upp

ஏமாற்றிய இயக்குனர்?

அந்த வகையில், லாக் அப் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், மீண்டும் ஒரு முறை பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. லாக் அப் நிகழ்ச்சியின் போட்டியாளரும், நடிகையுமான மந்தனா கரிமியிடம், தன்னுடைய வாழ்வின் ரகசியம் ஒன்றை வெளிப்படுத்தும் படி, கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மந்தனா கரிமி, முன்னணி இயக்குனர் ஒருவருடன் தனக்கு ரகசிய உறவு இருந்ததாக தெரிவித்தார். மேலும், அந்த இயக்குனர் மூலம் கரிமி கர்ப்பம் அடைந்ததாகவும், இதனை அறிந்த அந்த இயக்குனர் பின் வாங்கியதன் காரணத்தினால், தன்னுடைய  கருவை அவர் கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கண்ணீர் விட்ட கங்கனா

இப்படி தொடர்ந்து,  லாக் அப் போட்டியாளர்கள், தங்களின் வாழ்வில் நடந்த அந்தரங்க விஷயங்களை தெரிவித்து வருவது, ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதே வேளையில், மந்தனா கரிமியின் கதையைக் கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் கங்கனா ரனாவத் கண்ணீர் வடித்தார். இது பற்றி, நெட்டிசன் ஒருவர், மந்தனாவுக்கு நடந்த துயரம் பற்றி வேதனை அடைந்தும், அவரை கங்கனா ஆறுதல் படுத்திய விதம் பற்றி பாராட்டியும் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.

kangana reaction after mandana karimi secret in lock upp

இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை கங்கனா ரனாவத், "லாக் அப் என்பது, வாழ்வின் அழகு மற்றும் கொடுமை என இரண்டும் கலந்த கொண்டாட்டமாகும். எங்களின் வலி மற்றும் காயங்களை நாங்கள் வெளிப்படுத்தும் போது, அன்பு மற்றும் இரக்கம் பெற தகுதி உள்ளவர்களாக நிற்கிறோம்.  மந்தனாவை மக்கள் தவறாக மதிப்பிட மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை எளிதானது அல்ல" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் மனைவியுடன் உறவு, இப்ப "ரகசிய கர்ப்பம்".. கங்கனா நிகழ்ச்சி சர்ச்சைகள்

தொடர்புடைய இணைப்புகள்

kangana reaction after mandana karimi secret in lock upp

People looking for online information on Kangana Ranaut, Kangana Reaction, L, Lock upp show, Mandana Karimi, Mandana Karimi secret in lock upp will find this news story useful.