“வீட்டுக்கு வந்து கட்டிப்பிடிச்சு அழுத T ராஜேந்தர்”… ஏன்? விக்ரம் ஆடியோ launch-ல் கமல் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

Kamalhaasann talked about a incident with T Rajender

விக்ரம்….

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Kamalhaasann talked about a incident with T Rajender

ஆடியோ & பாடல் வெளியீடு…

இதையடுத்து நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கமல், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையில் படத்தின் மாஸான டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

Kamalhaasann talked about a incident with T Rajender

நிகழ்வில் கமலின் பேச்சு….

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பேச்சு அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது. விழாவில் பல விஷயங்களைப் பேசிய கமல் சினிமா, அரசியல் இரண்டிலும் பயணிப்பது குறித்து பேசும் போது “பலரும் என்னிடம் சொன்னார்கள் வருடத்துக்கு ஒரு படமாவது நடியுங்கள் என்று. யாருமே முழு நேர அரசியல்வாதி இல்லை. நான் கூட முழு நேர நடிகன் இல்லை. நான் அரசியலுக்கு செல்கிறேன் என்று தெரிந்ததும் சிம்புவின் தந்தை T ராஜேந்தர் என் வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுதார். ‘உங்களால் எப்படி சினிமா இல்லாமல் இருக்க முடியும்’ என்று கேட்டார். அந்த கேள்விதான் என்னை இங்கு வந்து நிறுத்தியுள்ளது. “ எனப் பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Kamalhaasann talked about a incident with T Rajender

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“வீட்டுக்கு வந்து கட்டிப்பிடிச்சு அழுத T ராஜேந்தர்”… ஏன்? விக்ரம் ஆடியோ LAUNCH-ல் கமல் பேச்சு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasann talked about a incident with T Rajender

People looking for online information on Anirudh, Lokesh Kanagaraj, Simbu, Vikram will find this news story useful.