தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பிரனீதா சுபாஷ் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.
அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின்னர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் ப்ரணிதா நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ப்ரணிதா பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். டிவிட்டரில் குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் பிரணிதா மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.