www.garudabazaar.com

'உலகநாயகன்' ரசிகர்களுக்கு மட்டுமில்ல... தளபதி ரசிகர்களுக்கும் 'சர்ப்ரைஸ்' இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம், கைதி படங்களின் வழியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய் நடிப்பில் இவர் இயக்கியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் இவரின் அடுத்த படத்தில் உலகநாயகன் கமலை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

#Kamal232 Movie Title will be revealed on November 7th

பர்ஸ்ட் லுக் மிகவும் பயங்கரமாக இருந்ததால் கண்டிப்பாக இதுவரை ஏற்காத ஒரு வித்தியாசமான வேடத்தில் கமலை இந்த படத்தில் காண முடியும் என, ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் டைட்டில் இன்னும் 2 தினங்களில் வருகின்ற நவம்பர் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் சற்றுமுன் அறிவித்து இருக்கிறார்.

இதனால் கண்டிப்பாக தீபாவளி ட்ரீட்டாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில் ரசிகர் ஒருவர் மாஸ்டர் அப்டேட்? என லோகேஷை கேட்க, பதிலுக்கு அவர் 'மிக விரைவில் நண்பா' என பதிலளித்து இருக்கிறார். இதனால் ஆண்டவர் ரசிகர்களுடன் சேர்ந்து தளபதி ரசிகர்களும் செம உற்சாகத்தில் இருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

#Kamal232 Movie Title will be revealed on November 7th

People looking for online information on Lokesh Kanagaraj will find this news story useful.