www.garudabazaar.com

'பாசமலர்' நவராத்திரியை வைத்து... 'மறைமுகமாக' வாரிய உலகநாயகன்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் வீட்டுக்கு அடங்காத பேரனாக இருந்த பாலாஜி குறித்து நேற்று கமல் கேள்வி எழுப்பினார். உங்களால் எல்லா பாயிண்டும் போய் விட்டது. தீபாவளி மட்டும் இல்லையென்றால் என்னவாகி இருக்கும் என்பதை நினைத்து பார்த்தீர்களா? என கமல் கேட்க, அமைதியாக பதில் சொன்ன பாலாஜி இடையில் பிக்பாஸ்க்கு லவ் யூ சொல்லி தன்னுடைய நன்றியை காட்டினார்.

Kamal talked about Pasamalar and Navratri Movies in Bigg Boss

ஹானஸ்ட் பிரச்சினை குறித்தும் அலசி, ஆராயப்பட்டது. இதில் சுச்சி அப்ரூவராக மாறிவிட, கமல் வெளியில் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியும் என ஜாலியாக கோர்த்து விட்டார். அப்போது பாலாஜி தங்கச்சியை நல்லா பார்த்துக்கிட்டேன் என்பது போல சொல்லி மாட்டிக்கொண்டார். இதுகுறித்து கமல் நேரடியாக பேசாமல், சனம் டாஸ்க்கை கையாண்டது குறித்து பேசும்போது அந்த பாத்திரமாகவே மாறிவிட வேண்டும் என்று கிண்டலடித்தார்.

பாசமலர் படத்தில் அண்ணன்-தங்கையாக சிவாஜி-சாவித்ரியை பார்த்துவிட்டு நவராத்திரி படத்தில் இருவரையும் ஜோடியாக பார்த்தபோது என்னவோ போல இருந்தது என்றார். இந்த நிலையில் பாலாஜி-ஷிவானிக்கு தான் அவர் அப்படி பேசினார் என ரசிகர்கள் அவரது உதாரணத்தை வைத்து கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்களை யாரு நாமினேட் பண்ணுவா? என கேட்டதற்கும் ஷிவானி பேரை வைத்து பாலாஜி எஸ்கேப் ஆக, அதற்கும் கமல் கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal talked about Pasamalar and Navratri Movies in Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.