"விக்ரம்" பட ஷூட்டிங்கில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த சூர்யா? செம்ம வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் ஹாசனுடன் நடிகர் சூர்யா சந்தித்துள்ள வீடியோ படு வைரலாகி வருகிறது.

Kamal Haasan Suriya Meeting Video Goes Viral on social media

தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள பாலா படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் விரைவில் துவங்க உள்ளது. சமீபத்தில் வெற்றிமாறன்  இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பிலும் சூர்யா கலந்து கோண்டார்.

Kamal Haasan Suriya Meeting Video Goes Viral on social media

இந்நிலையில் நடிகர் கமல் - சூர்யா சினிமா படப்பிடிப்பில் சந்தித்து, கமல் - சூர்யா இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படப்பிடிப்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பா? என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.  கமல்ஹாசனின் மிகத்தீவிர ரசிகரான சூர்யா, கமலை படப்பிடிப்பில் சந்தித்துள்ளது வைரலாகி உள்ளது.

Kamal Haasan Suriya Meeting Video Goes Viral on social media

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan Suriya Meeting Video Goes Viral on social media

விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல், நேற்று மே 11 ஆம் தேதி  வெளியாகியுள்ளது. 'பத்தல பத்தல' என தொடங்கும் இந்த பாடலை கமல் எழுதி பாடியுள்ளார். இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

"விக்ரம்" பட ஷூட்டிங்கில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த சூர்யா? செம்ம வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Suriya Meeting Video Goes Viral on social media

People looking for online information on Dilli, Kaithi, Kamal Haasan, Lokesh Kanagaraj, Suriya, Vikram will find this news story useful.