"எங்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை" - கமல்ஹாசன் உருக்கமான அறிக்கை
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டடு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அனைத்து மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது. தேர்தல் தோல்விக்கு மக்கள் தி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.
நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியைத் தொடருங்கள். உங்களை வெற்றி பெறச் செய்யாததை நினைத்து வருந்துமளவிற்குச் சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குத்தான்.
வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம். தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
தோல்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று permanent failure. திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாதவை. மற்றொன்று micro failure. திருத்திக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னகரும் வாய்ப்புள்ளவை. நாம் சந்தித்திருக்கும் பின்னடைவு இரண்டாம் வகை.
பல இடங்களில் 50% குறைவான வாக்காளர்களே தங்களது வாக்குகளைச் செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளைக் கழித்தால்,இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்தத் தேர்தலில் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது சுட்டுகிறது. நாம் பேச வேண்டியது அவர்களிடம்தான்.
இந்தச் சூழலை மாற்றவே முடியாது என சோர்ந்து போனவர்களும், அரசியல் நமக்குச் சொந்தமானதில்லை என ஒதுங்கிக்கொள்ளும் இளைஞர்களும் மனம் மாறி தங்களது ஜனநாயகப் பங்களிப்பைச் செய்கையில் சூழல் மாறும்.
'மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்' என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாகச் சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாகக் கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.
நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக்கொண்டிருக்கிறது. எங்களைப் போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டமான உண்மை.
என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. என அந்த அறிக்கையில் கமல்ஜாசன் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijay Makkal Iyakkam Trending TN Local Body Election 2022
- This Popular Star To Replace Kamal Haasan As Host For The Remaining Episodes Of Bigg Boss Ultimate? Ft STR
- Silambarasan TR Might Replace Kamal Haasan In Bigg Boss Ultimate
- Kamal Haasan Suddenly Quits Bigg Boss Ultimate; Reveals The Actual Reason; Sadness Grips Internet
- Kamal Haasan Opt Out From Bigg Boss Ultimate For Vikram Movie
- Thalapathy Vijay Apologizes To The Public For Creating Inconvenience During The TN Local Body Election 2022
- 22 Years Of Hey Ram Kamal Haasan Shah Rukh Khan Indian Cinema
- Saami Saami Singer Rajalakshmi Local Body Election Campaign
- Vikram's Cobra Director Ajay Gnanamuthu Breaks Silence On Film's Budget Controversy Ft T Siva
- Vikram Starring Cobra Movie Director Ajay Gnanamuthu Tweet About Film Budget
- Kanne Kalaimaane Kamalhaasan Version Heartmelt
- After 4 Years Vikram Cobra Movie Shoot Has Wrapped
தொடர்புடைய இணைப்புகள்
- Sir, உங்களுக்காகத்தான் Waiting 😍 மனைவியுடன் Happy-ஆ வந்த Vijay Antony ❤️ Anbu Chezhiyan
- Rajini, Kamal-யிடம் ஆசிர்வாதம் வாங்கிய மணமக்கள் 😍 ரொம்ப நாளாச்சு, இவங்கள ஒரே Function-ல பாத்து!
- "அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டாங்க திமுக"... கொந்தளித்த அண்ணாமலை..! ஆவேச பேட்டி
- ചുമ്മാ തീ 🔥🔥🔥 | Dhruv Vikram-ൻ്റെ കിടിലൻ Workout
- 'போலீஸ்னா பயமா?' கொலை குற்றவாளிக்கு பாலபிஷேகம் ! ஜெயில் வாசலில் மருது சேனை கட்சியினர் அட்டகாசம்
- 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்'.. மேயர் முதல் CM வரை..! Chapter- 1
- "அண்ணாமலை எங்கள தான் அடி அடினு அடிக்கிறார்.. HIJAB வேணாம்னா நீ பூணூல கழட்டு" -சீறிய சீமான்
- "2 ரூபா சாப்பாடு.. நெஞ்சை ரணமாக்கும் ரோட்டு கடை வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?" Painful பேட்டி
- "நாரதர் வேலையை காட்டுறியா?" | கு. ஞானசம்பந்தம்
- Vikram & Dhruv's Best LIVE Singing Performance On Stage!! | Heart Melting Voice😍😍😍
- 'SCHOOL போல வேட்பாளர்களுக்கு REPORT CARD.. மக்கள் தான் MARK போடணும்' -கமல் உறுதி
- "உங்க பணம் திருடனுங்க கிட்ட இருக்கு, அத நீங்க தான் மீட்டு எடுக்கணும்" - கமல்ஹாசன் ஆவேசம்