ஜி வி பிரகாஷ் & கௌதம் மேனன் நடிக்கும் புதிய படம்… title உடன் வெளியான மிரட்டல் first look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.

GV Prakash Gautham Menon movie title first look released

ஜி வி பிரகாஷின் செல்ஃபி

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா மற்றும் கௌதம் மேனன் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் செல்ஃபி. டி ஜி பிலிம் கம்பெனி மூலமாக சபரிஷ் என்பவர் தயாரித்த இந்த படத்தில் முக்கிய வேடங்களில் வித்யா பிரதீப், சங்கிலி முருகன், டி.ஜி.குணாநிதி, வாகை சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்த செல்ஃபி திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டார்.  இந்த படத்தில் ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்த திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. பின்னர் ஆஹா தமிழ் ஓடிடியில் இந்த திரைப்படம் வெளியானது.

GV Prakash Gautham Menon movie title first look released

மீண்டும் இணைந்த GVP & GVM

இதையடுத்து செல்ஃபி படத்துக்குப் பிறகு வெற்றிக்கூட்டணியான ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த புதிய திரைப்படத்தை ‘96’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் விவேக் இயக்குகிறார. இந்த படத்தில் முதல் லுக் மற்றும் போஸ்டர் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

GV Prakash Gautham Menon movie title first look released

மிரட்டலான போஸ்டர்…

இதையடுத்து தற்போது இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்துக்கு ‘13’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் மிரட்டலான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. போஸ்டர் வடிவமைப்பு மற்றும் ‘13’ என்ற தலைப்பு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது பேய்ப்படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

GV Prakash Gautham Menon movie title first look released

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash Gautham Menon movie title first look released

People looking for online information on G V Prakash Kumar, Gautham Menon will find this news story useful.