விக்ரம் படத்துல கமல் எழுதி பாடிய பாட்டு… செம்ம catchy வரிகள்- அனிருத் பகிர்ந்த viral pictures!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ள நிலையில் தற்போது ஒரு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Kamal penned a song in Vikram movie anirudh pic

நான்காண்டுக்குப் பிறகு…

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக  2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் வெளியானது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக அவர் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அவரின் அடுத்த படமாக விக்ரம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

விக்ரம் ஷூட்டிங்…

கமல், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய மூன்று பிஸியான நடிகர்களை வைத்து மும்முரமாக படப்பிடிப்பை நடத்திவந்தார் லோகேஷ். மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Kamal penned a song in Vikram movie anirudh pic

வெளியீடும் ப்ரமோஷனும்…

தமிழ் சினிமாவில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்துக்காகக் காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இப்போது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆடியோ லாஞ்ச் நடக்கும் இடம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal penned a song in Vikram movie anirudh pic

முதல் சிங்கிள் சர்ப்ரைஸ்…

இந்நிலையில் ஆடியோ ரிலீஸுக்கு முன்னர் மே 11 ஆம் தேதியே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் தனியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸாக படத்தில் கமல்ஹாசன் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி பாடியுள்ளதாக அனிருத் அறிவித்துள்ளார். மேலும் பாடல் எழுதுவதற்காக அனிருத், கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. கமல்ஹாசன் இதற்கு முன்பாக பல படங்களில் பல வெற்றிகரமான பாடல்களை எழுதியும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

விக்ரம் படத்துல கமல் எழுதி பாடிய பாட்டு… செம்ம CATCHY வரிகள்- அனிருத் பகிர்ந்த VIRAL PICTURES! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal penned a song in Vikram movie anirudh pic

People looking for online information on Anirudh, Kamal, Lokesh Kanagaraj, Vikram, Vikram single will find this news story useful.