www.garudabazaar.com

"மணி பசிக்குது மணி"🤣.. காளிதாஸ் பகிர்ந்த ஜாலி வீடியோ! ஜெயராம் கொடுத்த ரியாக்ஷன் தான் செம!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயராம் உணவகத்தில் உணவருந்தும் போது ஏற்பட்ட கலகலப்பான சம்பவத்தை நடிகர் காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்துள்ளார்.

Kalidas Jayaram Shared a Video of his father Jayaram

Also Read | கௌதம் மஞ்சிமா திருமணத்தில் மணிரத்னம் & சிவகார்த்திகேயன்.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். முதல் பாகமான “பொன்னியின் செல்வன்  -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்தது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்தனர்.

Kalidas Jayaram Shared a Video of his father Jayaram

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

'மணி பசிக்குது மணி'... ஜெயராமின் சூப்பர் ஹிட் டயலாக்காக மாறி உள்ளது.  பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் பிரபு போல மிமிக்ரி செய்து ஜெயராம் பேசியதை  ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.

Kalidas Jayaram Shared a Video of his father Jayaram

தற்போது ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஜெயராமிடம் இதே டயலாக்கை பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தான் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜெயராமுடன் அவரது மனைவி பார்வதி மற்றும் அவரது மகள் மாளவிகா ஆகியோர் ஒரு உணவகத்திற்கு வந்துள்ளனர். மூவரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது ஹோட்டல் ஊழியர் ஒருவர் 'மணி பசிக்குது மணி' என்கிறார். வீடியோவில், ஜெயராம் முதலில் அந்த ஊழியரைப் பார்த்து சிரித்து கொண்டே ரியாக்ஷன் கொடுப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் ஜெயராமின் மனைவி பார்வதியும் இதனால் பயங்கரமாக சிரித்து விடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"மணி பசிக்குது மணி"🤣.. காளிதாஸ் பகிர்ந்த ஜாலி வீடியோ! ஜெயராம் கொடுத்த ரியாக்ஷன் தான் செம! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kalidas Jayaram Shared a Video of his father Jayaram

People looking for online information on Kalidas Jayaram will find this news story useful.