‘இது எப்படி இருக்கு’... அதிரடியாக களம் இறங்கும் பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம், “பொன் மாணிக்கவேல்”. இந்தப் படத்தை பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஏ.சி. முகில் இயக்கியுள்ளார். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இசை, இமான். பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல்முறை. 

Prabhu Deva’s ‘Ponmanikkavelu’ movie releasd ott update!

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகள் மேல் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனது படத்திற்குச் சூட்டி  படப்பிடிப்பை துவங்கினார் பிரபுதேவா. ஆனால், படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னரும் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கிறது.

Prabhu Deva’s ‘Ponmanikkavelu’ movie releasd ott update!

கடந்த ஆண்டே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  சில காரணங்களால் வெளியாகாமல் போனது.  கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தில் இப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்து.

Prabhu Deva’s ‘Ponmanikkavelu’ movie releasd ott update!

இந்நிலையில், நேரடியாக ஓடிடி தளமான  டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பொன் மாணிக்கவேல் வெளியாகவிருக்கிறது என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Deva’s ‘Ponmanikkavelu’ movie releasd ott update!

People looking for online information on Ponmanikkavel, Prabhudeva will find this news story useful.