30% தான் உயிர் பிழைக்க வாய்ப்பு- கேன்சரால் பாதிக்கப்பட்ட காதலர் தின ஹீரோயின் திடுக் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேன்சரால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே, தன்னால் அதிக நாட்கள் வாழ முடியாது என மருத்துவர்கள் கூறியது குறித்து மனம் திறந்துள்ளார்.

Sonali Bendre reveals that she had only 30% chances of survival

‘பம்பாய்’ படத்தில் வரும் ‘ஹம்மா ஹம்மா..’ பாடலுக்கு நடனமாடிய சோனாலி பிந்த்ரே, ‘காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட்டிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சோனாலி, சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கீமோ தெராப்பி சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்தது, அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வந்த சோனாலி, தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறிது காலம் ஓய்வில் இருந்த சோனாலி, தற்போது மீண்டும் கேமரா முன் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மேகஸின் ஒன்றுக்கு போஸ் கொடுத்த சோனாலி, பேட்டி ஒன்றில், கேன்சர் பாதிப்பின் தனது ஆரம்பகால அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

அதில், முதலில் கேன்சர் இருப்பது தெரிய வந்ததும், எனது கணவர் நியூயார்க் அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார். அதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் இருக்கும்போது அங்கு ஏன் செல்ல வேண்டும் என இரவு முழுவதும் விமானத்தில் எனது கணவருடன் சண்டையிட்டேன் என்றார்.

இங்கு எடுக்கப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் நியூயார்க்கில் உள்ள மருத்துவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்தோம். அதனை பார்த்த அவர்கள், கேன்சர் 4ம் கட்டத்தை எட்டிவிட்டதாகவும், 30% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறினர். அதைக் கேட்டதும் அதிர்ந்துப்போனேன்.

பின் கணவரிடம் சண்டை போட்டதை நினைத்து வருத்தப்பட்டதாகவும், அந்த தருணத்தில் கடவுளுக்கு நன்றி கூறியதாகவும் சோனாலி தெரிவித்தார்.