BREAKING : மீண்டும் இணையும் 'கடலோர கவிதைகள்' நடிகர்கள்... ஆனா இந்த முறை என்ன கதை... என்ன பெயர்...?
முகப்பு > சினிமா செய்திகள்முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் நடிகர் சத்யராஜ். அவர் கடையாக நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகாவுடன் நடித்த தம்பி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை. இந்நிலையில் தற்போது அவர் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தம்பி படத்தில் நடித்த நடிகை சீதா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

"A PERFECT HUSBAND" என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த தொடர் ஒரு நல்ல குடும்பம் சார்ந்த கதையாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் வேறொரு ஆச்சரியமும் இருக்கிறது. ஆம் கடலோரக் கவிதைகள் படத்தில் சத்யராஜ் உடன் இணைந்து நடித்த நடிகை ரேகா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆண்டுகள் கழித்து மூன்று முக்கிய 80-களின் நடிகர்கள் இணைந்து நடிக்க இருக்கும் இந்த தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சம் தீர்ந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.