www.garudabazaar.com
iTechUS

பிக்பாஸ் பிரபலமான தன் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சார்பட்டா 'வேம்புலி'.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜான் கொக்கன் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தி உள்ளார்.

John Kokken wife Pooja Baby Shower Function Photos

Images are subject to © copyright to their respective owners.

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான் கொக்கன். இவர் அஜித்துடன் 'வீரம்' படத்தில் தமன்னாவை கொல்ல வரும் கூலிப்படை தலைவனாக நடித்திருப்பார்.  கே.ஜி.எஃப்- 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். கே.ஜி.எஃப் முதல் பாகத்திலும் நடித்திருந்தார்.  ’கப்ஜா’ என்ற கன்னட படத்திலும் ஜான் கொக்கன் நடித்துள்ளார்.

John Kokken wife Pooja Baby Shower Function Photos

Images are subject to © copyright to their respective owners.

துணிவு

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தில் யுவர் பேங்க் வங்கி உரிமையாளர் கதாபாத்திரமான க்ரிஷ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் ஜான் கொக்கன் நடித்துள்ளார்.

John Kokken wife Pooja Baby Shower Function Photos

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஜான் கொக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி பூஜாவுக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிறக்கப்போகும் குழந்தையை காண ஆர்வமாக இருப்பதாகக் கூறி ஆணா? பெண்ணா?  என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார். 

பிக்பாஸ் பூஜா ராமச்சந்திரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "முழு உலகிலும் எனக்குப் பிடித்த மனிதனுடன் ஒரு மனிதனை உருவாக்குவதை விட உற்சாகமானது எதுவுமில்லை.  எங்கள் வாழ்வின் புதிய கட்டத்தில் பெண்மை, காதல், நட்பு ஆகியவற்றை கொண்டாடுகிறோம்". என பூஜா பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

John Kokken wife Pooja Baby Shower Function Photos

People looking for online information on Bigg boss, John Kokken, Pooja, Thunivu will find this news story useful.