www.garudabazaar.com

சும்மா தெறிக்குது! மொத்தமாக 'ஆட்டம்' போட்ட போட்டியாளர்கள்... என்ன 'பாட்டு'ன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பேஷன் ஷோ என ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடே நேற்று களைகட்டியது. கடந்து வந்த பாதை டாஸ்க்கில் சோகக்கதை, ஹார்ட் டாஸ்க்கில் பிடிக்காத போட்டியாளர்களுக்கு ஹார்ட் புரோக்கன் கொடுத்தது, கிச்சன் டீம் பஞ்சாயத்துகள் என பிக்பாஸ் வீட்டின் முதல் வாரம் சோக கீதமாக இருந்தது. இதனால் போட்டியாளர்களும் லேசான பதட்டத்துடனேயே காணப்பட்டனர்.

Jithan Ramesh Danced for Thala song in Bigg Boss House

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பேஷன் ஷோ போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தேவையான ஒன்றாக இருந்தது. போட்டியாளர்களும் தங்கள் சண்டைகளை மறந்து சிறிது நேரம் ஜாலியாக இருந்தனர். குறிப்பாக அமைதியாக காணப்பட்ட ஷிவானி, கேப்ரியலாவின் டான்ஸ் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. சண்டை போட்டுக்கொண்ட சனம், பாலாஜி இருவரையும் நடுவர்களாக தேர்வு செய்து தன்னுடைய ராஜ தந்திரத்தை பிக்பாஸ் மீண்டுமொருமுறை நிரூபித்தார்.

சிவகார்த்திகேயனின் 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடலுக்கு ஷிவானி ஆட,  'தல'யின் அதாரு அதாரு பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் ஆட்டம் போட்டார். ஆனால் மொத்த ஹவுஸ்மேட்ஸையும் இந்த பாடல் ஆட வைத்து விட்டது. யாருக்கு கேமரா வைப்பது என எடிட்டிங் டீம் திணறி இருக்கக்கூடும். அந்தளவு பாரபட்சம் பாராமல் எல்லாரும் ஆடி தீர்த்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் தல பாட்டுக்கு மொத்த பிக்பாஸ் வீடும் ஆடுதுப்பா என ஹார்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Jithan Ramesh Danced for Thala song in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.