www.garudabazaar.com

"ஜாக்கி சான் அரசியலுக்கு வர்றாரா?"... அவரே தெரிவித்த பரபரப்பு கருத்து!!.. அப்படி என்ன சொன்னாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் தனக்கே உரிய சாகச பாணியில் பல அதிரடிப் படங்களில் நடித்து அசத்தியவர்.

jackie chan wants to join in chinas communist party

இவரது அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையே உலகம் முழுவதுமிருந்து பெற்றவர். குறிப்பாக இந்தியாவிலும் ஜாக்கி சான் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எண்ணற்ற அளவில் உள்ளனர். இப்படி தனது திறமை மூலம் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்ற ஜாக்கி சான், தமது 8 வயது முதல் நடிகராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும் ஹாங்காங்கில் பல  திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 

jackie chan wants to join in chinas communist party

இதனிடையே சீன அரசு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனை எதிர்த்து ஒருபுறம் ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது ஜாக்கி சான், சீனாவுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக அவர் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்ததுடன், ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக சீனா இப்படி செய்வதாகவும் அவர்கள் விமர்சித்து வந்தனர். 

jackie chan wants to join in chinas communist party இந்நிலையில் தற்போது சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பெய்ஜிங்கில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசியுள்ள கருத்துக்கள் தான் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

jackie chan wants to join in chinas communist party

அதில் பேசியவர், “சமீபமாகவே சீனா வேகமாக முன்னேறி வருவதை பல நாடுகளுக்கு நான் செல்லும்போது உணர முடிகிறது. எனவே ஒரு சீன குடிமகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உலகம் முழுதுமே ஐந்து நட்சத்திரங்களை உடைய நம் சிவப்புக் கொடிக்கு மரியாதை கிடைக்கிறது.” என்று பேசினார்.

jackie chan wants to join in chinas communist party

அத்துடன் விட்டாரா?.. அந்த பரபரப்பான கருத்தை அதன் பிறகுதான் கூறினார். ஆம், கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருவதாய் குறிப்பிட்ட ஜாக்கி சான், அந்த கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜாக்கியின் இந்த கருத்து அனல் பறக்கும் பல்வேறு விதமான விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. பலரும் அவரது இந்த முடிவை வரவேற்று வாழ்த்தியும் வருகின்றனர். 

ALSO READ: "இந்தி ரீமேக்கில் சூரரைப் போற்று".. சூர்யாவே தயாரிக்கிறார்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க!

jackie chan wants to join in chinas communist party

People looking for online information on Jackie Chan will find this news story useful.