OTT vs தியேட்டர்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் புது முடிவு! சிக்கலில் தலைவி திரைப்படம்?
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கமால் இருந்தது. பின்னர் தமிழக அரசு 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து லாபம், தலைவி படங்கள் செப்டம்பர் 10ல் தியேட்டரில் வெளியாகின்றன. இதில் தலைவி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைவி படம் திரையரங்குகளில் ரிலீசான இரண்டு வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தம் திரையரங்க உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.
இதனால் தலைவி படத்தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே சில தினங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத்தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர் சங்க கூட்டம் இன்று (02.09.2021) நடந்தது. இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் படி ஓடிடியில் வெளியான திரைப்படங்களை திரையரங்குகளில் எப்பொழுதும் வெளியிடமாட்டோம் என்றும், திரையரங்குகளில் வெளியாகும் படங்களை குறைந்தது 4 வாரங்களுக்கு பிறகே OTTயில் வெளியிட வேண்டும் என்றும், இதனை மீறும் படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்றும்,OTTயில் வெளியாகும் படங்களுக்கு பிரிவ்யூ காட்சிகளுக்கு திரையங்குகளை தரமாட்டோம் எனவும் முடிவு செய்துள்ளனர்.