RRR Others USA
www.garudabazaar.com

சினிமாவில் கால்பதித்த அர்ஜுன் சம்பத்..அருணாச்சலம் கெட்டப்பில் தெறி நடனம்.. வைரலான வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Indu Makkal Katchi Founder Arjun Sambath Dance Video Viral

இறுகிய ABS வயிற்று தசையுடன் ராஷ்மிகா மந்தனா! என்னா பிட்னஸ்யா இது..! வைரல் புகைப்படம்

அர்ஜுன் சம்பத்

தமிழகத்தில் இயங்கி வரும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவார். பரபரப்பான அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் இவர் தற்போது புதிய தமிழ் படம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்த பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு அர்ஜுன் சம்பத் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புதிய படம்

ஆர்கேஜி மூவீஸ் நிறுவனம் தயாரித்துவரும் புதிய தமிழ் படம் 'நல்லது நடக்கும்'. இதில் கங்காதரன் கதாநாயகனாக நடித்துவருகிறார். படத்திற்கு மனிஷ் இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கங்காதரனே மேற்கொள்கிறார். இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை கங்காதரன் எழுத, மீதி பாடல்களை கவிஞர் சினேகன் எழுதி உள்ளார்.

உதவி

அறிமுக நாயகனாக இந்தப் படத்தில் களமிறங்கும் கங்காதரன், இந்தப் படத்தில் வரும் வசூலில் 60 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் மற்றும் பிற சமூக சேவைகளுக்கு வழங்கப்படும் என முன்னரே அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் பாடல்கள் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது.

நடனம்

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அர்ஜுன் சம்பத் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்தில் வரும் "அதாண்டா,,இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா" என்ற பாடலில் ரஜினி கெட்டப் போல வேஷ்டி சட்டை இடுப்பில் துண்டு என அர்ஜுன் சம்பத் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.

அரசியல் தளத்தில் பரபரப்பாக இயங்கிவரும் அர்ஜுன் சம்பத், புதிய தமிழ் படம் ஒன்றில் நடமாடும் வீடியோ தற்போது மக்களிடையே வேகமாக பரவிவருகிறது.

அட பிரியா பவானி சங்கரா இது? ஜொலிக்கும் மாடர்ன் உடையில் வைரல் Pic!

சினிமாவில் கால்பதித்த அர்ஜுன் சம்பத்..அருணாச்சலம் கெட்டப்பில் தெறி நடனம்.. வைரலான வீடியோ..! வீடியோ

Indu Makkal Katchi Founder Arjun Sambath Dance Video Viral

People looking for online information on Arjun Sambath, Arjun Sambath Dance Video, Indu Makkal Katchi, Indu Makkal Katchi Founder, Indu Makkal Katchi Founder Arjun Sambath will find this news story useful.