"ப்ளீஸ் லொள்ளு சபா போடுங்க"... விஜய் டிவிக்கு வேண்டுகோள் வைத்த, பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
![Indian Cricket Player Asks Vijay Tv To ReTelecast Lollu sabha Againவிஜய் டிவிக்கு வேண்டுகோள் வைத்துள்ள , பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் Indian Cricket Player Asks Vijay Tv To ReTelecast Lollu sabha Againவிஜய் டிவிக்கு வேண்டுகோள் வைத்துள்ள , பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/indian-cricket-player-asks-vijay-tv-to-retelecast-lollu-sabha-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் மக்களுக்கு பெரிய ஆறுதலாக இருப்பது தொலைக்காட்சியும், மொபைலும் தான். அதிலும் பல சேனல்கள் மக்களை மனரீதியாக உற்சாகமாக வைத்திருக்க சில வித்தியாசமான யோசனைகளை செய்து வருகின்றனர். படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல சூப்பர்ஹிட் படங்களை சீரியல்களுக்கு பதிலாக ஒளிபரப்புகின்றனர்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு நிகழ்ச்சி "லொள்ளு சபா". இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர் ஒருவர் டிவிட்டரில் விண்ணப்பம் வைக்க, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஷ்வின் "நானும் இதை வழிமொழிகிறேன், விஜய் டிவி" என்று கூறியுள்ளார்.
Totally agree. 🔥🔥🤩 @vijaytelevision https://t.co/dU2OOo90HB
— lets stay indoors India 🇮🇳 (@ashwinravi99) March 29, 2020