www.garudabazaar.com

''எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளது'' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்பிபி உடல்நிலை விரைவில் குணமாக வேண்டி நாடு முழுவதும் திரையுலக பிரபலங்கள் அவர்களது ரசிகர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவரது விருப்பமான பாடல்களை பகிர்ந்து அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்தனர்.

Hospital clarifies about Popular Singer SP Balasubrahmanyam's health Condition | பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

மேலும் எஸ்பிபியின் உடல்நிலை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரணும் மருத்துவமனை நிர்வாகமும் தினமும் அறிக்கை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தகவல் பரவிய நிலையில் மருத்துவமனை இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hospital clarifies about Popular Singer SP Balasubrahmanyam's health Condition | பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். எல்லோரும் கடவுளிடம் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மேம்பட்டு வருகிறது. நம் வேண்டுதல்கள் நாளுக்கு நாள் அவரது உடல்நிலையை மேம்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Hospital clarifies about Popular Singer SP Balasubrahmanyam's health Condition | பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

People looking for online information on Coronavirus, SP Balasubrahmanyam, SPB will find this news story useful.