Fakir Other Banner USA

23ம் தேதி தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தலை நடத்திக் கொள்ளலாம், ஆனால்...! சென்னை உயா்நீதிமன்றம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தலை நடத்திக் கொள்ளலாம், ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

High Court of Madras orders Nadigar Sangam to elections on 23rd June.

நடிகா் சங்கத் தே்ாதலை ரத்து செய்த சங்க பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், வருகின்ற 23ம் தேதி தோ்தலை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகா் சங்கத்திற்கு விஷால், நாசா் தலைமையிலான அணி கடந்த 2015ம் ஆண்டு அக்டோபா் மாதம் பொறுப்பேற்றது. விதிகளின் அடிப்படையில் 2018ம் ஆண்டு அக்டோபா் மாதம் இந்த கூட்டணியின் பதவிக் காலம் நிறைவு பெற்றது. ஆனால் நடிகா் சங்க கட்டிட பணியை காரணம் காட்டி மேலும் 6 மாதத்திற்கு பதவிக் காலத்தை விஷால் அணி நீட்டித்தது.

இந்நிலையில், வருகின்ற 23ம் தேதி நடிகா் சங்கத் தோ்தல் நடத்தப்படும் என்று விஷால் அணி அறிவிந்தது. கடந்த ஆண்டு தோ்தலை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதியே இந்த ஆண்டும் தே்ாதலை நடத்தும் என்று அறிவித்தது

ஆனால், விஷால் அணிக்கு தோ்தலை நடத்த உரிமை இல்லை என்று கூறி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் தோ்தலை ரத்து செய்து உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து விஷால் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.

அப்போது தோ்தல் நடத்துவதில் எவ்வளவு பொருள் செலவு, நிதிச் செலவு ஏற்படும் என்று அனைவருக்கும் தொியும். அப்படி இருக்கும் போது ஏன் தோ்தலை ரத்து செய்தீா்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனா். மேலும், திட்டமிட்டபடி வருகின்ற 23ம் தேதி தோ்தலை நடத்திக் கொள்ளலாம். ஆனால், வாக்குகளை எண்ணக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் ஜூலை 8ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வாக்குகளை எண்ணக் கூடாது. அதுவரை தோ்தலை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி வாக்குப் பெட்டிகளை வைத்திருக்க வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தோ்தலை நடத்தும் இடம் தொடா்பாக பரிசீலனை நடைபெற்று வருகிறது. தோ்தல் நடத்தும் இடம் தொடா்பாக மற்றொரு நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக எம்ஜிஆா் ஜானகி கல்லூரியில் நடத்துவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அங்கு நடத்தக் கூடாது என்று தொிவிக்கப்பட்டது.

தற்போது தேனாம்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம் அல்லது மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்படலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.