www.garudabazaar.com

Video: அவரு உண்மையிலேயே 'ஜென்டில்மேன்' தான்... ஆரியை பாராட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பொங்கல் சாப்பிட்டு கொண்டிருந்த பாலாஜியை அப்படியே பிக்பாஸ் பிரீஸ் செய்துவிட, அவரை கிண்டலடிக்க வந்த ஆரியையும் கோர்த்து விட்டு பிக்பாஸ் அழகு பார்த்தார். இதைப்பார்த்த ரம்யா என்ன ரெண்டு பேரும் நல்லா கொஞ்சுக்கிறீங்க பார்க்க நல்லா இல்ல என கிண்டலடித்தார். ஷிவானி அம்மா, ரம்யாவின் குடும்பத்தினர் என வருகின்றவர்கள் ஆரியிடம் நன்றாகவே பேசி செல்கின்றனர்.

'He is true gentleman' Netizens praised Aari Arjunan

குறிப்பாக ரம்யாவின் அம்மா யார்கிட்ட பிரச்சினை வந்தாலும் அவங்ககிட்ட போய் நேரடியா பேசு. மத்தவங்க கிட்ட பேசாத என சொல்லி சென்றார். இதுபோல ரியோ மனைவி ஸ்ருதியும் என் புருஷன்கிட்ட சண்டை போடாதீங்க என ஆரியிடம் கூறினார். இந்த நிலையில் ஆரி செய்த ஒரு விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிச்சனில் இருந்த ரியோ கீழே எதையோ குனிந்து பார்க்க பிக்பாஸ் அவரை பிரீஸ் செய்தார்.

இதேபோல கேபிக்கும், சோம்க்கும் நடந்தது. மூவரும் குனிந்த நிலையில் யோகா போஸ் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஆரி அருகே இருந்த எப்ரானை எடுத்து கேபிக்கு போர்த்தி விட்டார். அவரின் இந்த செயலைப்பார்த்த ரசிகர்கள். எங்க அண்ணன் உண்மையிலேயே ஜென்டில்மேன் தான் என பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'He is true gentleman' Netizens praised Aari Arjunan

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.