www.garudabazaar.com

ஒருத்தவங்க பத்தி 'இன்னொருத்தவங்க' கிட்ட சொல்லாத... பாராட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஷிவானி மற்றும் பாலாஜி வீட்டில் இருந்து வந்திருந்தனர். இதனால் அடுத்து யார் வரப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் நேற்று ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் வந்திருந்தனர். முதலில் அவரது சகோதரர் உள்ளே வர, சிறிது நேரம் கழித்து அவரின் அம்மா சஸ்பென்ஸ் என்ட்ரி அளித்தார்.

Ramya Pandian's mom given nice advice to her, Twitter reacts

இருவரும் வீட்டில் உள்ள அனைவரிடமும் நன்றாக பேசி பழகினர். ரம்யாவின் சகோதரர் பரசு பாண்டியன் சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்த்து விட்டார். குறிப்பாக ரம்யாவின் அம்மா அவருக்கு மிகவும் தேவையான அறிவுரை ஒன்றை வழங்கினார். இதுகுறித்து அவர் நீ நன்றாகத்தான் விளையாடுகிறாய். ஆனால் உனக்கு யாரிடமாவது பிரச்சினை இருந்தால் அவர்களிடம் அதை நேரடியாக சொல்லி விடு. வேறு யாரிடமும் அதுகுறித்து பேசாதே என கூறினார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ரம்யாவுக்கு தேவையான அறிவுரையை அவரின் அம்மா வழங்கி இருக்கிறார் என அவரை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian's mom given nice advice to her, Twitter reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.