'கஷ்டப்பட்டு உழச்சோம், ஆனா அந்த படம் நாங்க எதிர்பார்த்த அளவுக்கு போகல' - பிரபல ஹீரோ வருத்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு சிரிஸ் ஹீரோவாக நடித்து கடந்த மே 17 ஆம் தேதி வெளியான படம் ஏபிசிடி.  இந்த படத்தை மதுரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Allu Shirish tweets about his Birthday And ABCD

இந்நிலையில் மே 30 ஆம் தேதி அவரது பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். இதனையடுத்து தனது ஏபிசிடி படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த சிறப்பான நாளில் நான் மிகப் பெரிய அன்பையும் நேசத்தையும் பெற்றுள்ளேன்.  என்னுடைய இயக்குநர் சஞ்சீவ் ரெட்டியும், ஏபிசிடி படக்குழுவினர் அனைவரும் பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க கடினமாக உழைத்தோம்.

நாங்கள் எதிர்பார்த்த அளவு அந்த படம் போகவில்லை. நான் பார்வையாளர்களின் முடிவையும் எல்லா விமர்சனங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் தொடர்ந்து நல்ல படங்களை வழங்குவதற்காக கடினமாக உழைப்பேன் என அல்லு சிரிஸ் அதில் தெரிவித்துள்ளார்.