www.garudabazaar.com

ஜி.வி.பிரகாஷ் முதல் முறை.. வெப் சீரிஸுக்காக பாடிய பாடல்.. அதன் பிறகு செய்த நெகிழ்ச்சி காரியம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் 'விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும் 'மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் 'ஆதலினால் காதல் செய்வீர்'.

GV Prakash sings for web series and donates to girl student

இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் இதுதான் முதல்முறை.

GV Prakash sings for web series and donates to girl student

“'ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே! ஹே நண்பா... கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..” என்று தொடங்கும் உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுதியுள்ளார். மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிற ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு  சந்தோஷ் இசையமைத்துள்ளார்.

'இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியது மேலும் நெகிழவைத்துள்ளது.  ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பாடல் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ALSO READ: இயக்குநர் ராம்-உடன் இணையும் "மாநாடு" தயாரிப்பாளர்.. நடிக்கப் போறது இவங்களா? வெளியான செம்ம அறிவிப்பு!

GV Prakash sings for web series and donates to girl student

People looking for online information on GV Prakash Kumar will find this news story useful.